சிவகார்த்திகேயன் தற்போது தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நம்பிக்கை நட்சத்திரமாகிவிட்டார். இவர் படங்கள் மீது ரசிகர்களுக்கு மிகுந்த எதிர்ப்பார்ப்பு உருவாகிவிட்டது.
இந்நிலையில் சமீபத்தில் வந்த வேலைக்காரன் பாக்ஸ் ஆபிஸில் செம்ம வசூல் செய்து வருகின்றது. இப்படம் 5 நாள் முடிவில் தமிழகத்தில் மட்டுமே ரூ 35 கோடிகள் வரை வசூல் செய்துவிட்டதாம்.
எப்படியும் உலகம் முழுவதும் ரூ 43 கோடிகளுக்கு மேல் இப்படம் வசூல் செய்திருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
மேலும், ரஜினி, விஜய், அஜித் படங்களுக்கு பிறகு இத்தனை குறுகிய நாட்களில் இவ்வளவு வசூல் வருவது சிவகார்த்திகேயனுக்கு மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.