தீரன் அதிகாரம் ஒன்று படம் படத்தின் மூலம் மிகவும் பாராட்டப்பட்டவர் நடிகர் கார்த்தி. இவருக்கு வந்த பெரும் அதிர்ச்சி திருவண்ணாமலையை சேர்ந்த அவரது ரசிகர் இறந்தது தான்.
ரசிகர் மன்ற தலைவராக இருக்கும் ஜீவன் குமார் சாலை விபத்தில் மரணம் அடைந்தார். இவரது திருமணத்தில் கார்த்தி கலந்து கொண்டார். திருமணமாகி மூன்றே மாதங்கள் ஆன நிலையில் ஜீவன் இறந்தது பெரும் அதிர்ச்சியே.
கார்த்திக் அவரின் இறுதி சடங்கில் கலந்துகொண்டு கண் கலங்கி அழுதார். இந்நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டி கொடுத்த கார்த்தி, தலை போகும் வேலையாக இருந்தாலும் இரவு நேர பயணத்தை தவிர்த்து விடுங்கள்.
பகல் நேர பயணத்தை எடுத்து கொள்ளுங்கள். உயிர் முக்கியம் என கூறியுள்ளார்.